இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப்பின் அசத்தலான சுழல், ரோஹித்தின் அதிரடி சதம் ஆகியவற்றால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ரோஹித், கோலி, ராகுல் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பொதுவாகவே இலக்கை விரட்டுவதில் கைதேர்ந்த இந்திய  அணியில், சேஸிங் மாஸ்டர் கோலி மற்றும் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.

இலக்கை விரட்டுவதில் இந்தியா சிறந்த அணி என்பதை அறிந்தும்கூட, டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, கடந்த போட்டியில் குல்தீப்பின் பவுலிங்கை தவிர மற்ற பவுலர்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நன்றாகத்தான் ஆடினார்கள். குல்தீப்பின் பவுலிங்கை மட்டும்தான் அவர்களால் அடித்து ஆடமுடியவில்லை. மேலும் அவரிடம்  மட்டுமே 6 விக்கெட்டுகளை இழந்தனர். எனவே அவரிடம் வீழ்ந்துவிடாமல் சமாளித்து ஆடிவிட்டால், கண்டிப்பாக நல்ல ஸ்கோரை எட்டலாம் என இங்கிலாந்து அணி எண்ணியிருக்கும்.

அதேபோல, ஹிட்மேன் ரோஹித் சர்மா களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடியவர். தற்போது அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால், இந்திய அணியை முதலில் பேட்டிங் ஆடவிட்டால், மெகாலய ஸ்கோரை எட்டிவிடும் என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கலாம். அவர் மட்டுமல்லாமல் ராகுல், கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சிறந்த ஃபார்மில் உள்ளனர். எனவே இந்திய அணியை முதலில் பேட்டிங் ஆடவிட்டால், அது ஆபத்தாக அமையும் என இங்கிலாந்து அணி நினைத்திருக்கக்கூடும்.

அதனால்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடிவருகிறது. குல்தீப்பை சமாளித்து ஆடவேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை இந்த முறையும் சிதைத்துவிட்டார் குல்தீப். கடந்த முறையை போலவே இந்த முறையும், இங்கிலாந்து அணிக்கு ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துக் கொண்டிருந்த பேர்ஸ்டோவை 38 ரன்களிலும் ஜேசன் ராயை 40 ரன்களிலும்ம் வெளியேற்றினார். குல்தீப் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் பேர்ஸ்டோவையும், அவரது இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஜேசன் ராயையும் வீழ்த்தினார்.

அதன்பிறகு ஜோ ரூட்டுடன் இயன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடிவருகின்றனர். 27 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.