இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை இந்திய ஏ அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். 

தென்னாப்பிரிக்கா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான அங்கீகாரமில்லாத முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இளம் பவுலர் முகமது சிராஜ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  வளர்ந்துவரும் பவுலரான சிராஜ் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய ஏ அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முகமது சிராஜ் முதிர்ச்சியுடன் பந்துவீசுகிறார். கடந்த சில போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகிறார் சிராஜ். கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்திய ஜூனியர் அணியில் சிராஜ் அதிகம் ஆடியதில்லை. எனினும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு தனது திறமையை வளர்த்துக்கொண்டு அருமையாக வீசுகிறார் சிராஜ். அவர் தனது திறமையை சிறப்பாக வளர்த்துவருகிறார். சிராஜிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்.

ராகுல் டிராவிட்டின் பாராட்டையே பெற்றுவிட்டதால், சிராஜிற்கு கண்டிப்பாக கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.