தோனியுடனான உறவு ஆறாத வடுவாக உள்ளதாக நடிகை ராய் லட்சுமி மனம் திறந்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும் நடிகை ராய் லட்சுமிக்கும் இடையேயான உறவு, 2008ம் ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம். ராய் லட்சுமியை காண தோனி, அடிக்கடி சென்னை வந்ததாகவும் தகவல்கள் பரவின. 

தோனியும் ராய் லட்சுமியும் காதலிக்கின்றனர் என்ற தகவல் பரவியது. ஆனால் இருவருக்கும் இடையே நட்பு மட்டும்தான் என ராய் லட்சுமி என அப்போதே தெரிவித்திருந்தார். எனினும் அவரது விளக்கம் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இருவரும் காதலிப்பதாகவே தகவல்கள் தொடர்ந்து பரவிய வண்ணம் இருந்தன. 

பிறகு தோனி 2010ம் ஆண்டு சாக்‌ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகாவது ராய் லட்சுமியுடனான உறவு குறித்து பேசப்படுவது நின்றுவிடும் என்றால், அவ்வளவு எளிதாக அவர்கள் இருவருக்குமிடையேயான உறவு குறித்த பேச்சு நின்றுவிடவில்லை.

இந்நிலையில், தோனியுடனான உறவு குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ராய் லட்சுமி, தோனியுடனான உறவு ஒரு காயமாக உள்ளது. நீண்ட காலத்திற்கு முந்தைய எங்களது உறவு குறித்து இப்போதும் பலர் ஆர்வமாக பேசும் அளவிற்கு, அவர்களுக்கு பொறுமையும் மனநிலையும் இருப்பதை கண்டு ஆச்சரியமாக இருக்கிறது. 

தோனியின் கடந்த கால வாழ்வையும் உறவையும் தோண்டுவதிலையே ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன. எனது குழந்தைகள் வளர்ந்து தொலைக்காட்சியை பார்த்துவிட்டு, தோனியுடனான எனது உறவு குறித்து என்னிடம் கேட்டுவிடுவார்களோ என்ற அச்சமும் எனக்கு உள்ளது. 

தோனியை எனக்கு நன்றாக தெரியும். அவருடனான எனது உறவு காதல் இல்லை; ஏனென்றால் அது சரிவராது என்பது தெரியும். இருவரும் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம் என ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.