Asianet News TamilAsianet News Tamil

pujara rizwan: இதற்குத்தானே காத்திருந்தோம்! இந்தியா-பாகிஸ்தான் ஒன்றாக களமிறங்கிய தருணம்: புகழும் நெட்டிஸன்கள்

pujara rizwan  :இங்கிலாந்தில் நடந்து வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இ்ந்திய வீரர் சத்தேஸ்வர் புஜாராவும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும் சேர்ந்து பார்டனர்ஷிப் அமைத்து விளையாடியதை நெட்டிஸன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

pujara rizwan :  Twitter goes crazy as picture of Pujara, Rizwans dream partnership goes viral
Author
London, First Published Apr 30, 2022, 2:17 PM IST

இங்கிலாந்தில் நடந்து வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இ்ந்திய வீரர் சத்தேஸ்வர் புஜாராவும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும் சேர்ந்து பார்டனர்ஷிப் அமைத்து விளையாடியதை நெட்டிஸன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

லண்டனில் கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர் சத்தேஸ்வர் புஜாரா, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆகியோர் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்கள். 

 

இதில் துர்ஹாம்அணிக்கு எதிரான நேற்றை ஆட்டத்தில் இந்திய வீரர் புஜாரா அபாரமாக ஆடி சதம் அடித்து 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். மற்றொரு முனையில்  பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இருவரும் கடைசிநேர பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் மகிழ்ச்சியாக சிரித்துப் பேசி உரையாடியதை கவுன்ட்சி சாம்பியன்ஷிப் நிர்வாகமே புகழ்ந்துள்ளது.

கிரிக்கெட் உலகில் பரமவைரிகளாக் பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளைச் சேர்ந்த இரு வீரர்கள் ஒற்றுமையாக ஒரே அணியில் விளையாடுவதும், பார்ட்னர்ஷிப் அமைத்து பேட் செய்வதும், மகிழ்ச்சியாக சிரித்துப் பேசுவதும் பார்க்க வித்தியாசமாக இருந்தது. இதைத்தானே எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

இதுவரை புஜாரா சசெக்ஸ் அணிக்காக 3 சதங்களை விளாசியுள்ளார், இதில் ஒன்று இரட்டை சதமாகும். டெர்பிஷையர் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸி்ல் 6 ரன்னில் ஆட்டமிழந்த புஜாரா, 2-வது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து 201 ரன்கள் சேர்த்தார். 
2-வது போட்டியில் வோர்செஸ்டயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புஜாரா முதல் இன்னிங்ஸில் 109 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 12 ரன்களும் சேர்த்தார். 

 

தற்போது 3-வது ஆட்டத்தில் துர்ஹாம் அணிக்காக ஆடிவரும் புஜாரா 128 ரன்களுடன் களத்தில் உள்ளார். புஜாராவும், ரிஸ்வானும் அமைத்த பார்ட்னர்ஷிப்புக்கு கவுன்டி சாம்பியன்ஷிப் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “ என்னமாதிரியான கனவு பார்ட்னர்ஷிப்” எனப் புகழ்ந்துள்ளது. 
முகமது ரிஸ்வான் இதுவரை சிறப்பான இன்னிங்ஸை ஆடவில்லை. டெர்பிஷையர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 22 ரன்கள் சேர்த்தார், 2-வது இன்னிங்ஸில் பேட் செய்யவில்லை. 

வோர்செஸ்டர்ஷையர் அணிக்கு எதிரா ஆட்டத்தில் இரு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். 6-வதுவிக்கெட்டுக்கு புஜாரா, ரிஸ்வான் கூட்டணி அமைத்து ஆடி வருகிறார்கள். இதுவரை சசெக்ஸ் அணி வெற்றி பெறவில்லை, இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தால் சசெக்ஸ் அணிக்கு முதல் வெற்றி கிடைக்கும்.

நெட்டிசன்களில் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ரி்ஸ்வான், புஜாரா பார்ட்னர்ஷிப், கனவு நனவாகிவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவதான் கிரிக்கெட்டின் உண்மைான அழகு வெளிப்படும். வாய்ப்பு இருந்தால், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலும், பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் விளையாடலாம்” எனத் தெரிவித்தார்

 

மற்றொரு ரசிகர் ட்விட்டரில் “ கவுன்டி சாம்பியன்ஷிப் தேசத்தை ஒன்றாக்கிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.  

மற்றொரு ரசிகர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ புஜாரா, ரிஸ்வான் ஒன்றாக பேட் செய்கிறார்கள். இங்கிலாந்தால் பிரிக்கப்பட்டது, இங்கிலாந்தில் ஒன்று சேர்ந்தது. கிரிக்கெட்டின் அழகு” எனத் தெரிவித்துள்ளார்.

கவுன்டிசாம்பின்ஷிப் ட்விட்டரில் “ என்னமாதிரியான கனவு பார்ட்னர்ஷிப் , இதற்குத்தானே ஆவலுடன் காத்திருந்தோம்” எனத் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios