Asianet News TamilAsianet News Tamil

Pro Kabaddi League: யு மும்பாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றி..! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்

புரோ கபடி லீக் 9வது சீசனின் இன்றைய போட்டியில் யு மும்பா அணியை 34-20 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணி புள்ளி பட்டியலில் 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 

pro kabaddi league 2022 tamil thalaivas beat u mumba and goes to 5th place in points table
Author
First Published Nov 22, 2022, 9:25 PM IST

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு.பி யோதாஸ் அணிகள் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவருகின்றன.

FIFA World Cup 2022: கடும் கட்டுப்பாடுகளால் கடுப்பான ரசிகர்கள்! காசு கொடுத்து போலியாக கூட்டம் சேர்த்த கத்தார்?

இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்ற டபாங் டெல்லி அணி, அதன்பின்னர் தொடர் தோல்விகளை தழுவி கடும் சரிவை சந்தித்தது. அதேவேளையில், தொடக்கத்தில் தொடர் தோல்விகளை தழுவிய தமிழ் தலைவாஸ் அணி, அதன்பின்னர் டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய வலுவான அணிகளை எல்லாம் வீழ்த்தி தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறது.

இன்று யு மும்பா அணியை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி, அபாரமாக விளையாடி 34-20 என்ற கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.

FIFA World Cup 2022:செமயா ஆடிய சவுதி அரேபியா.. மெஸ்ஸியை தவிர யாருமே கோல் அடிக்கல! அர்ஜெண்டினா அதிர்ச்சி தோல்வி

சீசனின் தொடக்கத்தில் புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்து 2-3ம் இடங்களில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி, அதன்பின்னர் சிறப்பாக ஆடி இப்போது புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios