Asianet News TamilAsianet News Tamil

#TokyoOlympics உங்கள் வெற்றி நமது பெண் சக்தியை உணர்த்துகிறது..! வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கு பிரதமர் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 3வது பதக்கத்தை வென்று கொடுத்த பாக்ஸிங் வீராங்கனை லவ்லினா போர்கொஹைனுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
 

pm narendra modi spoke to boxer lovlina borgohain and congratulates her for winning bronze medal in tokyo olympics
Author
Tokyo, First Published Aug 4, 2021, 2:55 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா 3 பதக்கங்களை வென்றிருக்கிறது. அந்த 3 பதக்கங்களையுமே வீராங்கனைகள் தான் வென்று கொடுத்தனர். 

மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலம் வென்றார். மகளிர் பாக்ஸிங் 69 கிலோ எடைப்பிரிவில் லவ்லினா வெண்கலம் வென்றார்.

pm narendra modi spoke to boxer lovlina borgohain and congratulates her for winning bronze medal in tokyo olympics

வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். லவ்லினாவிடம் பேசிய பிரதமர் மோடி, உங்களது வெற்றி இந்திய நமது பெண்களின் திறமைக்கான அடையாளம். நமது பெண் சக்தியை உறுதி செய்யும் விஷயம் என்று வாழ்த்தினார்.

மேலும், லவ்லினாவின் வெற்றி ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை என்றும் குறிப்பாக அசாம் மற்றும் வடகிழக்கு மக்களுக்கு மிகப்பெரிய பெருமை என்றும் வாழ்த்தினார் பிரதமர் மோடி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios