கேமிங் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி – வைரல் வீடியோ!
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கேமிங் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் கலந்துரையாடிய வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு எத்தனையோ பேர் அடிமையானதும், அந்த விளையாட்டால் மன அழுத்தம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் உண்டு. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் பப்ஜி விளையாட மத்திய அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து தற்போது உள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்றவாறு மீண்டும் பிஜிஎம்ஐ என்ற பெயரில் விளையாட்டு ஆப் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கேமிங் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுடன் கலகலப்பான உரையாடலில் ஈடுபட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
நாட்டில் கேமிங் சமூகத்தில் ஸ்போர்ட்ஸ் ஆளுமைகளின் வளர்ச்சியை எடுத்துக் காட்டி பிரதமர் மோடியை சந்திப்பதற்கு 7 இந்திய விளையாட்டு வீர்ரகள் அழைக்கப்பட்டனர். அவர்களில் தொழில்ரீதியாக மோர்டல் என்று அழைக்கப்படும் நமன் மாத்தூரும் இடம் பெற்றார். நமன் மாத்தூரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அதோடு யூடியூப்பில் 7 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கின்றனர்.
நமன் மாத்தூரைத் தொடர்ந்து S8ul Esports என்ற நிறுவனத்தின் இணை இயக்குநர் அனிமேஷ் அகர்வால், யூடியூப் பிரபலம் அன்ஷூ பிஷ்ட், குளோபல் இஸ்போர்ட்ஸ் பிளேயர் கணேஷ் கங்காதர், கேம் டெவெலப்பர் டிர்த் மேத்தா, கேமிங் கிரியேட்டர் பயல் தாரே, பொழுதுபோக்கு மற்றும் கேமிங் உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்ற மிதிலேஷ் படங்கர் ஆகியோ பலரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி கேம் விளையாடிய புகைப்படங்கள் S8UL என்ற எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.