Asianet News TamilAsianet News Tamil

#TokyoOlympics ஆரவாரங்களால் அதிரும் ஒலிம்பிக் அரங்கங்களில் மயான அமைதி..! கொரோனாவால் நேர்ந்த கொடுமை

பொதுவாக ஒலிம்பிக் அரங்கங்கள் ரசிகர்களின் ஆரவாரங்களால் ஆர்ப்பரிக்கும். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கம் மயான அமைதியுடன் காட்சியளிக்கிறது. 
 

pin drop silence in tokyo olympic auditoriums very big setback for athletes
Author
Tokyo, First Published Jul 30, 2021, 11:02 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடக்கவேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு நடத்தப்படுகின்றன. கடந்த 23ம் தேதி தொடங்கி ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவருகின்றன. 

முறையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பார்வையாளர்களற்ற வெற்று அரங்கில் தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அப்படியிருந்தும் ஒலிம்பிக் கிராமத்தில் பல பேருக்கு தொற்று உறுதியானது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலையெல்லாம் மீறி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

pin drop silence in tokyo olympic auditoriums very big setback for athletes

பார்வையாளர்கள் இல்லாத அரங்கங்களில் ஆடும் போட்டிகளை டிவியில் பார்ப்பதற்கே நன்றாக இருக்காது. அப்படியிருக்கையில் கைத்தட்டுகளையும், ஆரவாரங்களையுமே உத்வேகமாக எடுத்துக்கொண்டு விளையாடும் வீரர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. விளையாட்டு வீரர்களுக்கு பார்வையாளர்களின் ஆரவாரங்களும், கைத்தட்டுகளுமே உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் அதை அனைத்து வீரர்களும் மிஸ் செய்கின்றனர்.

பார்வையாளர்களின் ஆர்ப்பரிப்புகளால் அதிரும் ஒலிம்பிக் அரங்கங்கள் மயான அமைதியில் காட்சியளிக்கின்றன. இந்த அமைதி ஒலிம்பிக் போட்டிகளை கலையிழக்க செய்கின்றன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios