ஐ.பி.எல்.லில் டெல்லி அணிக்காக களம் இறங்கி அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்ட்  இந்தியா ஏ அணிக்காகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இருந்தாலும் இந்திய அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. நடந்து முடிந்த IPL போட்டிகளில் 684 ரன்கள் குவித்தவர் ரிஷப் பன்ட். ஐ.பி.எல்.லில் இவரது பேட்டிங் சராசரி 173.60 ஆகும். மேலும் ஐ.பி.எல் போட்டியில் அற்புதமான சதம் அடித்தும் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருந்தார் ரிஷப் பன்ட். இருந்தாலும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ரிஷப் பந்துக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.  
ஆனால் தீபக் சஹர், க்ரனல் பாண்ட்யா, அக்சர் பட்டேல் போன்றோருக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் இங்கிலாந்தில் டிரை சீரிஸ் விளையாடிய இந்தியா ஏ அணிக்காக களம் இறங்கிய ரிஷப் பன்ட் அங்கும் தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்திய ஏ அணிக்காக சிறப்பாக ஆடிய ரிஷப் பன்ட் மறுபடியும் தன்னுடைய திறமையை நிரூபித்தார். மேலும் இந்த டிரை சீரிசில் இந்திய ஏ அணிக்காக இறுதிப்போட்டியில் ரிஷப் பன்ட் அடித்த அரை சதம் தான் கோப்பையை நமக்கு வென்று கொடுத்தது.

 இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஏ அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய ஏ அணியில் விளையாட ரிஷப்  பன்டுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம் பெறுவது உறுதி என்று ரிஷப் பன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருந்தாலும் ஐ.பி.எல் போட்டிகளில் அதிரடி காட்டிய ரிஷப் பட்டை எதற்காக இந்திய அணியில் பி.சி.சி.ஐ சேரக்க மறுக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.