Asianet News TamilAsianet News Tamil

100 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப் பதக்கம்... வரலாற்று படைத்தார் நீரஜ் சோப்ரா..!

2017 உலக சாம்பியனான ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜோஹன்னஸ் வெட்டரை தோற்கடித்து இந்த தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் சோப்ரா.

Neeraj Chopra ends India's 100-year wait for an Olympic medal in athletics, wins gold
Author
Tokyo, First Published Aug 7, 2021, 6:17 PM IST

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். இந்தியா athletics பிரிவில் பெறும் முதல் தங்கம் இதுவாகும். சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவின் நீண்டகால தங்கப்பதக்க கனவு நனவாகியுள்ளது.Neeraj Chopra ends India's 100-year wait for an Olympic medal in athletics, wins gold

இவர் தகுதி சுற்று போட்டியில் 86.65 மீட்டர் ஈட்டி எறிந்து இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். அதையடுத்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்தார். இதில் மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்றனர். முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர், இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர், மூன்றாவது வாய்ப்பில் 76.79 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புள்ளி பட்டியலில் முன்னிலை வகித்து வந்தார்.

மொத்தம் நடக்கும் 6 சுற்றுகளில் முதல் மூன்று சுற்றுகளில் முன்னிலையில் இருக்கும் 8 பேர் அடுத்த 3 சுற்றுகளில் பங்கேற்பர். அதன்படி புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அடுத்த 3 சுற்றுகளில் பங்கேற்றார்.அதையடுத்து நடைபெற்ற 4வது, 5வது,6வது சுற்றுகளின் முடிவிகலிலும் முன்னிலையில் இருந்த நீரஜ் சோப்ரா சொல்லியடித்து இந்தியாவிற்காக தங்கம் வென்றார்.

இது இந்த ஒலிம்பிக் மட்டுமல்லாது இந்தியா athletics பிரிவில் பெறும் முதல் தங்கம் இதுவாகும். சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவின் நீண்டகால தங்கப்பதக்க கனவு நனவாகியுள்ளது. நீரஜ் சோப்ராவின் பதக்கம் ஒலிம்பிக்கில் இந்தியாவின் இரண்டாவது தனிநபர் தங்கமாகும், 2008 ல் அபினவ் பிந்த்ராவின் 10 மீட்டர் ஏர் ரைபிள் வெற்றியின் மூலம் முதல் பதக்கம் வந்தது.Neeraj Chopra ends India's 100-year wait for an Olympic medal in athletics, wins gold

முன்னதாக பெல்ஜியத்தில், ஆன்ட்வெர்பில் 1920 ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் ஐந்து பேர் கொண்ட இந்திய அணியில் மூன்று டிராக் அண்ட் ஃபீல்ட் விளையாட்டு வீரர்கள் இருந்தனர்-மற்ற இருவரும் மல்யுத்த வீரர்கள். அப்போது இந்தியா தங்கம் வென்றது. அதன்பிறகு, எந்த இந்தியரும் தடகளத்தில் பதக்கம் வென்றதில்லை.

Neeraj Chopra ends India's 100-year wait for an Olympic medal in athletics, wins gold

அரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள கந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகன், ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை வென்று புதிய வரலாற்றை எழுதியுள்ளார். 2017 உலக சாம்பியனான ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜோஹன்னஸ் வெட்டரை தோற்கடித்து இந்த தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் சோப்ரா. நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் 47 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது வரை ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலப் பதங்களுடன் இந்தியா 47 ஆவது இடத்தில் உள்ளது. நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 6 கோடி பரிசுத் தொகை அளிக்கப்படும் என ஹரியாணா அரசு அறிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios