முதல் ஓவரிலேயே முரளி விஜய் அவுட்!! ரன்னே எடுக்காமல் விக்கெட்டை இழந்த இந்தியா

https://static.asianetnews.com/images/authors/a3d865ff-350d-54f1-ae0b-e6327862a3a9.jpg
First Published 10, Aug 2018, 3:44 PM IST
murali vijay out in very first over in second test match against england
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார் முரளி விஜய்.
 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார் முரளி விஜய்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் போட்டியில் விராட் கோலியை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் சரியாக ஆடவில்லை. சொதப்பலான பேட்டிங்கின் காரணமாக வெற்றியின் விளிம்பு வரை சென்ற இந்திய அணி, தோல்வியடைந்தது. 

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியிருக்க வேண்டும். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று போட்டி தொடங்கியிருக்க வேண்டிய நிலையில், நேற்று முழுவதும் தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. டாஸ் கூட போடப்படவில்லை. 

இரண்டாவது நாளான இன்று டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக் கிறிஸ் வோக்ஸும், டேவிட் மாலனுக்கு பதிலாக போப்பும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக ஆடாத தவான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புஜாரா சேர்க்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும் ராகுலும் களமிறங்கினர். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். முதல் ஓவரின் 5வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் போல்டாகி வெளியேறினார் முரளி விஜய். இந்திய அணி ரன்னே எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து ராகுலுடன் புஜாரா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 

loader