நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு, ஆதரவும், எதிர்ப்பும் வலுக்க தொடங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், அவர் நட்சத்திர வீரராகவேஜொலிக்கிறார். தோனியின் மனைவி சாக்‌ஷி மாடலிங்கில் விருப்பம் உள்ளவர் ஆவார்.
 
இந்நிலையில், அவர் புது காஸ்ட்யூம் அணிந்தபடி, புகைப்படங்கள் சில எடுத்து, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் அவர் சற்று கவர்ச்சியாக இருக்கும்படி, மார்பகம் பாதியளவுக்கு தெரியும்படி இருக்கிறார். இந்த போட்டோவைகுறிவைத்து பலர் காரசாரமான கருத்துகளை பதிவிட தொடங்கியுள்ளனர். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நீங்கள் இப்படி அரைகுறை ஆடை அணியலாமா?, எனச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும்சிலர், ‘’பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய நீங்கள், அரைகுறை ஆடை அணிவது மிகவும் அருவெறுப்பாக உள்ளது,’’எனக் கூறியுள்ளனர்.
 
எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், சாக்‌ஷிக்கு ஆதரவுக்குரலும் அதிகமாக உள்ளது. இந்த புகைப்படத்தில் சாக்‌ஷி அழகாகத்தான்உள்ளார். அவரை பற்றி வதந்தி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,’’ என்றும், சிறு கிறுக்கர்கள் பேசுவதை பற்றி நீங்கள்கவலைப்படாதீர்கள் மேடம்‘’ என்றும் ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர், கலாசாரம் பற்றி தெரியாதவர்கள், பெண்களை குறிவைத்து இவ்வாறு பேசுவது கண்டிக்கத்தக்கது. கலாசார வகுப்புஎடுப்பதை நிறுத்திவிட்டு, பெண்கள் மேல் உண்மை அக்கறை செலுத்த முன்வரவேண்டும்,’’ எனவும் சாக்‌ஷிக்கு ஆதரவாகக் குரல்எழுப்பியுள்ளனர். இதுபற்றி சாக்‌ஷி தோனி எந்த கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
 
சமீபகாலமாக, இன்ஸ்டாகிராமில் பிரபலங்களை குறிவைத்து, சிலர் வேண்டுமென்றே விமர்சனங்களை தெரிவிப்பது வழக்கமாக உள்ளது. பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, பரினீதி சோப்ரா, தாப்ஸி பான்னு, ஈஷா குப்தா, மல்லிகா ஷெராவத் போன்ற பலர் இவ்வாறுபுகைப்படங்கள் வெளியிட்டதற்கு, கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர். இந்த வரிசையில் தற்போது சாக்ஷி தோனியும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.