உலக கோப்பை கால்பந்து போட்டியில் மூன்று கோல் அடித்து ஸ்வீடனும், ஒரு கோல் கூட போடாத மெக்ஸிகோ அணியும் நாக் ஔட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியன.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் 'எஃப்' பிரிவின் லீக் ஆட்டம் எகாடெரின்பர்கில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் ஸ்வீடன் அணி மற்றும் மெக்ஸிகோ அணி மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்வீடன் தரப்பில் அகஸ்டின்சன் 50-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். 

பின்னர், கிரான்க்விஸ்ட் 62-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து எடானோ அல்வாரெஸ் கோல் ஒன்று அடித்தார்.  

இப்படி ஸ்வீடன் அணி மொத்தம் மூன்று கோல்களை அடித்து முன்னிலையில் இருந்தது. ஆனால், மெக்ஸிகோ அணி இறுதிவரை எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் ஸ்வீடன் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. 

மூன்று கோல்கள் அடித்து ஸ்வீடன் அணி மெக்ஸிகோவை வீழ்த்தினாலும் புள்ளிகள் அடிப்படையில் ஸ்வீடனோடு சேர்த்து, மெக்ஸிகோ அணியும் நாக் ஔட் சுற்றுக்கு முன்னேறியது.