Asianet News TamilAsianet News Tamil

FIH Hockey World Cup 2023:ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி 4ஆவது போட்டியில் இந்தியா - ஸ்பெயின் பலப்பரீட்சை!

ஒடிசாவில் நடக்கும் உலகக் கோப்பை ஆண்களுக்கான ஹாக்கி தொடரில் இன்று இந்தியா, ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

Mens World Cup Hockey 2023 India will fight with Spain in 4th Match today at 7 pm
Author
First Published Jan 13, 2023, 1:11 PM IST

ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பை தொடர் ஒடிசாவில் இன்று நடக்கிறது. இதற்கான தொடக்க விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டாக் நகரில் நடந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. ஆனால், அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடத்தப்படவில்லை. இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை ஆண்களுக்கான ஹாக்கி தொடர் லீக் போட்டிகள் ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய பகுதிகளில் நடக்கிறது.

1 இல்ல, 2 இல்ல 95 முறை ஜெயித்த இந்தியா!

இன்று நடக்கும் 4ஆவது போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவில் உள்ள 4 அணிகளும், மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். குரூப்பில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

ஒரு நாள் போட்டியில் அதிக முறை தோற்ற அணி என்ற சாதனையை படைத்த இலங்கை!

குரூப் ஏ - அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ்

குரூப் பி - பெல்ஜியம், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா

குரூப் சி - சிலி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து

குரூப் டி- இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, வேல்ஸ்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிப்பு!

உலகக் கோப்பை வரலாற்றில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் இந்த முறை உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. அதுமட்டுமின்றி குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள சிலி நாட்டிற்கு இது தான் முதல் உலகக் கோப்பை தொடர்.

இன்று பிற்பகல் 1 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 மணிக்கு நடக்கும் 3ஆவது போட்டியில் இங்கிலாந்து அணியும், வேல்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்தியா மோதும் போட்டிகள்:

ஜனவரி 13: இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

ஜனவரி 15: இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதுகின்றன.

ஜனவரி 19: இந்தியா - வேல்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்திய அணி: 

மந்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங், கிரிஷன் பகதூர் பதக், பிஆர் ஸ்ரீஜேஷ், ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), நிலம் சஞ்சீப் செஸ், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங், ராஜ்குமார் பால், ஜுக்ராஜ் சிங்

எஸ்ஏ20:போட்டியை வேடிக்கை பார்த்த காவ்யா மாறன்: பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி அபார வெற்றி!

Follow Us:
Download App:
  • android
  • ios