உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த மேரி கோம் !! நம்பர் 1 வீராங்கனை !! குவியும் பாராட்டுகள் !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 11, Jan 2019, 8:52 AM IST
mary kom is the no 1 boxer in world
Highlights

சர்வதேச குத்துச் சண்டை அசோசியேசன்  வெளியிட்டுள்ள தரவரிசையில்  மேரி கோம் 1700 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதையடுத்து உலகின் நம்பர் 1 வீராங்கனையானார் மேரி கோம். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
 

மேரி கோம்  மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குத்துச் சண்மை வீராங்கனை.. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். [2]. இவர் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்தியாவின் வீராங்கனை ஆவார்.

2012 லண்டன் கோடை கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்ட இந்தியாவின் ஒரேயொரு குத்துச்சண்டை வீராங்கனை இவராவார். இதில் 51 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. என்றாலும், அபாரமாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப்படைத்தார்.

இந்நிலையில் சர்வதேச குத்துச்சண்டை அசோசியேசன் குத்துச்சண்டை உலகத் தரவரிசையை வெளியிட்டது. இதில் 45 முதல் 48 கிலோ லைட் பிளை பிரிவில் இடம்பிடித்துள்ள மேரி கோம் 1700 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் .இதையடுத்து மேரி கோமுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேரி  கோமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் என்ற திரைப்படம் சக்கைப் போடு போட்டது.

loader