இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது, ஒரு இளைஞர் தனது காதலியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மண்டியிட்டு மொழிந்தார். காதலனின் கோரிக்கையை அந்த பெண்ணும் ஏற்றுக்கொண்டார். அந்த வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தது. 

இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் போது 24வது ஓவரில் மைதானத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. 

தனது காதலியுடன் போட்டியை ரசித்து கொண்டிருந்த ரசிகர் ஒருவர், தனது காதலிக்கு மண்டியிட்டு பரிசளித்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கோரினார். இதைக்கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அந்த பெண், அவரது கோரிக்கையை ஏற்று திருமணத்திற்கு சம்மதித்தார். இருவரும் கட்டியணைத்து காதலை பரிமாறிக்கொண்டனர். சுற்றியிருந்தவர்கள், கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பின்போது அப்படியே காட்டப்பட்டது. 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Oh wow. First televised proposal at Lord’s and Bumble is all over it 😂😍🏏 <a href="https://twitter.com/hashtag/ENGvIND?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ENGvIND</a> <a href="https://t.co/R2wsHab1wS">pic.twitter.com/R2wsHab1wS</a></p>&mdash; Kalika (@Journo_K) <a href="https://twitter.com/Journo_K/status/1018100660515074048?ref_src=twsrc%5Etfw">July 14, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

இந்த புகைப்படமும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.