செம்பு மற்றும் பித்தளையை சுத்தம் செய்யும் தூளை கண்டுபிடித்த மலேசியாவின் லூனாஸ் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு கனடாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

கனடாவில் சர்வதேச அளவிலான ‘புத்தாக்க’ போட்டி நடைபெற்றது. இதில் மலேசியாவின் கெடா லூனாஸ் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் செம்பு, பித்தளையை சுத்தம் செய்யும் தூளைக் கண்டுபிடித்ததற்காக தமிழ் மாணவர்களான மோனிஷா சங்கரன், முகிலன் முனியாண்டி, நிஷாஸ்ரீ, கருணாகரன், ஷிவாணி சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. மேலும் போலந்து அமைப்பு ஒன்று சிறப்பு விருதையும் வழங்கி இருக்கிறது. தங்கப் பதக்கம் வென்று பினாங்கு சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.