இந்திய கிரிக்கெட் ரசிகர்களால், நேற்றைய தினம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரையிறுதி போட்டியில், இந்தியா தன்னுடைய முழு முயற்சியோடு விளையாடியும் தோல்வியை தழுவியது. 

குறிப்பாக தல தோனி விளையாடிய போது, துரதர்ஷ்டவசமான கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆனார். அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தோனி வெளியேறியது தான் இந்திய அணி தோல்வியை தழுவ காரணம் என இந்த ஏமாற்றத்தை ரசிகர்கள் பலரால் மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாமல் தங்களுடைய ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களும், ஆதரவான கருத்துக்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.  தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்றுகூட சிலர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'தோனிக்கு மிகவும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தயவுசெய்து ஓய்வு முடிவை தோனி எடுக்க வேண்டாம். உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை. நீங்கள் ஓய்வு குறித்த முடிவை இப்போது அறிவிக்க வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள்' என பதிவிட்டுள்ளார்.

அதிகம் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கருத்தை தெரிவிக்காத இவர், தோனி மீது வைத்துள்ள அன்பால் இப்படி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.