இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீரர்களை ரன்கள் குவிக்க விடாமல் குல்தீப் யாதவ் தனது சுழலின் மூலம் திணறடித்தார். ராய், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 268 ரன்கள் சேர்த்தது. ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் மட்டுமே அரைசதம் அடித்தனர். 

269 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, தொடக்கத்தில் நிதானமாகவும் பிறகு அதிரடியாகவும் ஆடி ரன்களை குவித்தார். சதமடித்த ரோஹித் சர்மா 137 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். இந்த போட்டியில் முதல் விக்கெட்டாக ஷிகர் தவான் அவுட்டாகிய பிறகு, ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். ரோஹித் அதிரடியாக ஆட, அவருக்கு கோலி ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">WICKET - Kohli is out stumped <a href="https://t.co/Xd4AKHyvPr">https://t.co/Xd4AKHyvPr</a></p>&mdash; PRINCE SINGH (@PRINCE3758458) <a href="https://twitter.com/PRINCE3758458/status/1017471362611535874?ref_src=twsrc%5Etfw">July 12, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

75 ரன்கள் குவித்த கோலி, அடில் ரஷீத் பவுலிங்கில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். 7 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டியில் இதில்தான் கோலி ஸ்டம்பிங் ஆகியுள்ளார். ஸ்டம்பிங் செய்யப்பட்ட பிறகு, அதை அவுட்டா என்பதை உறுதி செய்ய கள நடுவர், மூன்றாவது நடுவரின் உதவியை நாடினார். ஆனால், அவுட் என்பதை அறிந்த கோலி, உடனடியாக நடுவரின் முடிவிற்கு காத்திருக்காமல், உடனடியாக நடையை கட்டினார் கோலி.