தாய் மண்ணும் கூட தாய்க்கு இணையானது என்று சொல்வார்கள். அந்த செண்டிமெண்டைக் கையில் எடுத்து, ஆளுக்கு ஒரு பிடி மண் போட்டு ஒரு கண்ணாடிக் குடுவையில் லண்டனுக்கு அன்ப்பி வைத்திருக்கிறார்கள், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்  கோலிபடித்த பள்ளி நிர்வாகத்தினர்.

இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பைப் போட்டியில் ஆடிய முதல் ஆட்டத்தில் தரமான சம்பவம் செய்து தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி   நம்பிக்கையளித்திருக்கிறது கோலி அன் கோ. 1983ல் கபில்தேவும் 2011ல் தல தோனியும் வென்றதுபோலவே இந்த ஆண்டு கோலியும் உலகக் கோப்பையைத் தட்டித்தூக்கி வரவேண்டுமென்பது இந்தியர்களின் நப்பாசையாக இருக்கிறது.

இதே நப்பாசையுடன், கோலி தனது கிரிக்கெட் பேட்டை முதன் முதலில் கையில் பிடித்த பள்ளி நிர்வாகம், புதுமையான முறையில் மண் வாழ்த்து ஒன்றை சேகரித்து உலகக்கோப்பை நடந்துவரும் இங்கிலாந்துக்கு அனுப்பியிருக்கிறது. கோலியின் பள்ளி காலத்து கிரிக்கெட் கேப்டன் உள்ளிட்டோர், அவர் விளையாடிய மைதானத்திலிருந்து ஆளுக்கு ஒரு பிடி மண் சேகரித்து கோப்பையைத் தட்டி இந்த மண்ணுக்குக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என்ற வேண்டுதலோடு அந்த தாய் மண் வாழ்த்தை கோலிக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த மண் செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகிறதா என்று பார்க்க இன்னும் ஒரு மாதம் காத்திருக்கவேண்டும். அதற்கு முன் நீங்க உண்மையான இந்தியனா இருந்தா இந்த செய்தியை 5 விராத் கோலி ரசிகர்களுக்கு ஷேர் பண்ணுங்க.