Asianet News TamilAsianet News Tamil

இது கோலி தானா..? ஏன் இப்படி ஆயிட்டாரு..? ரசிகர்கள் அதிர்ச்சி

kohli missed a new record chance in ireland series
kohli missed a new record chance in ireland series
Author
First Published Jun 30, 2018, 11:29 AM IST


இந்திய அணி கேப்டன் விராட் கோலி, புதிய சாதனை ஒன்றுக்கு வெறும் 17 ரன்களை எடுக்க முடியாமல் திணறிவருகிறார்.

சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் விராட் கோலி, சாதனைகளையும் சதங்களையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கூட கோலி முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

kohli missed a new record chance in ireland series

போட்டிக்கு போட்டி ரன்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி, வெறும் 17 ரன் எடுத்தால் ஒரு சாதனையை படைத்துவிடலாம் என்ற நிலையில் அதை எடுக்க திணறிவருகிறார். 

அயர்லாந்துக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் ஆடிய இந்திய அணி, இரண்டிலும் வெற்றி பெற்றது. அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளை ஆடுவதற்கு முன்னதாக 57 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 1983 ரன்களை குவித்திருந்தார் கோலி. 

kohli missed a new record chance in ireland series

எனவே அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 17 ரன்கள் எடுத்தால் விரைவில் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருப்பார். ஆனால் அந்த போட்டியில் அவர் கடைசி ஓவரில் தான் களமிறங்கினார். அதிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானதால் சாதனையை நிகழ்த்த முடியவில்லை. 

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலாவது 17 ரன்கள் எடுத்து இந்த சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த போட்டியிலும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். எவ்வளவோ ரன்களை குவித்துள்ள கோலி, வெறும் 17 ரன்னை எடுத்து புதிய சாதனையை படைக்க முடியாமல் திணறிவருகிறார். 

kohli missed a new record chance in ireland series

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி ஜூலை 3ம் தேதி நடைபெறுகிறது. அதிலாவது எஞ்சியுள்ள 8 ரன்களை எடுப்பாரா என்று பார்ப்போம்..

கோலிக்கு முன்னதாக இதுவரை,  கப்டில், மெக்கல்லம் ஆகியோர் மட்டுமே 2000 ரன்களை கடந்துள்ளனர். ஆனால் அவர்களில் கப்டில் 68வது போட்டியிலும் மெக்கல்லம் 66வது போட்டியிலுமே 2000 ரன்களை கடந்தனர். எனவே அடுத்த போட்டியில் 8 ரன்கள் அடித்தால் கோலி இந்த சாதனையை நிகழ்த்தலாம். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios