தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை தற்போது இந்திய வீரர்கள் பலரும் அடித்து வருகின்றனர். இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து கோலியும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடியுள்ளார். 

பொதுவாக போட்டியின் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேனை கட்டுப்படுத்த யார்க்கர் பந்துகளை பவுலர்கள் வீசுவது வழக்கம். யார்க்கர் மூலம் பேட்ஸ்மேனை கட்டுப்படுத்த முடியும் என்ற இலக்கணத்தை, ஹெலிகாப்டர் ஷாட் மூலம் உடைத்தவர் தோனி. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை தற்போது மற்ற இந்திய வீரர்களும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். 

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில், மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷான், ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார். 

அதன்பிறகு அண்மையில் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார். 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் கோலியும் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார். இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது. 

இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். தொடக்கத்தில் தவான், ராகுல் விக்கெட்டை விரைவில் இழந்த இந்திய அணிக்கு ரோஹித் - கோலி கூட்டணி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து கொடுத்தது. 

ரோஹித்துடன் இணைந்து கோலி சிறப்பாக ஆடினார். 29 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி பேட்டிங்கின்போது, 14வது ஓவரை பிளன்கெட் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸருக்கு அனுப்பினார் கோலி. ஆஃப் திசையில் விலக்கி வீசப்பட்ட அந்த பந்தை ஹெலிகாப்டர் ஷாட் மூலம் லாங் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு அனுப்பினார் கோலி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

<blockquote class="twitter-tweet" data-lang="en-gb"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/CeAYytKJUs">pic.twitter.com/CeAYytKJUs</a></p>&mdash; Utkarsh Bhatla (@UtkarshBhatla) <a href="https://twitter.com/UtkarshBhatla/status/1016043682754154496?ref_src=twsrc%5Etfw">8 July 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>