இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தோனியின் பேச்சை மதிக்காமல் குல்தீப் சொன்னதை கேட்டு கேப்டன் கோலி ரிவியூ கேட்டார். ஆனால் அது அவுட் இல்லை என்பதால் ரிவியூ வீணானது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 148 ரன்கள் எடுத்தது. 149 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் சிறப்பாக ஆடி இங்கிலாந்தை வெற்றி பெற செய்தார். 

இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்கின் போது 10வது ஓவரை குல்தீப் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்து, அலெக்ஸ் ஹேல்ஸின் கால்காப்பில் பட்டது. குல்தீப் அவுட் கேட்க, அம்பயர் மறுத்துவிட்டார். உடனே ரிவியூ கேட்கும்படி கேப்டன் கோலியிடம் குல்தீப் கூறினார்.

ஆனால் விக்கெட் கீப்பர் தோனி, பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே சென்றதால் ரிவியூ கேட்க தேவையில்லை என்றார். ஆனால் கோலியோ, அவுட் கிடைத்துவிடாதா என்ற ஆசையில் குல்தீப்பின் பேச்சை கேட்டு ரிவியூ கேட்டார். ஆனால் தோனி சொன்ன மாதிரியே பந்து லெக் ஸ்டம்பிறகு வெளியே சென்றது. 

அதனால் அவுட் இல்லை என மூன்றாவது நடுவரும் தெரிவித்துவிட்டார். தோனியின் பேச்சை கேட்காமல் ரிவியூவை வீணடித்தனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

<iframe src="https://player.vimeo.com/video/278725607" width="640" height="358" frameborder="0" webkitallowfullscreen mozallowfullscreen allowfullscreen></iframe>
<p><a href="https://vimeo.com/278725607">DhoniCalledIt</a> from <a href="https://vimeo.com/user84455776">kevin love</a> on <a href="https://vimeo.com">Vimeo</a>.</p>

ரிவுயூ கேட்பதில் தோனி வல்லவர். எது அவுட்? எது அவுட் இல்லை? என்பதை சரியாக கணித்துவிடுவார். தோனியை பற்றி தெரிந்தும்கூட, அவரது பேச்சை குல்தீப்பும் கோலியும் கேட்கவில்லை. அதற்கான பலனையும் அனுபவித்தனர்.