துருக்கியில் நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் அவர்.காயத்தில் இருந்து மீண்டு 2 ஆண்டுகளுக்குப் பின் பங்கேற்ற தீபா கர்மாகர் பெறும் முதல் தங்கம் இதுவாகும்.

துருக்கியில் உள்ள மெர்சின் நகரில், எப்ஐஜி ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பைப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் சிறப்பாக செயல்பட்டு 14.150 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.

தகுதிச்சுற்றில் 13.400 புள்ளிகள்பெற்று முதலிடம் பெற்றார் கர்மாகர்.கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் முதல் முறையாக இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கர்மாகர் 4-வது இடத்தைக் கைப்பற்றினார்.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 24வயதான தீபா கர்மாகர், உலகக் கோப்பைப் போட்டியில் பெறும் முதல் தங்கப்பதக்கமாகும். தீபா கர்மாகருடன் அவரின் பயிற்சியாளர் பிஷேஸ்வர் நந்தி உடன் சென்றார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பின் தீபாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு 2 ஆண்டுகள் வரை ஓய்வு; பயிற்சிக்குப்பின், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்த காமென்வெல்த் போட்டியில்பங்கேற்றார்.

அதில் தீபா தங்கம் வெல்வார்என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது கிட்டவில்லை. இந்நிலையில், உலகக்கோப்பையில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.அடுத்து நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய ஜிம்னாஸ்டிக் அணியில் தீபா கர்மாகரும் இடம் பெற்றுள்ளார்.