உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக எகிப்து நட்சத்திர வீரர் முகமது சலா தெரிவித்துள்ளார்.

எகிப்து அணி செசன்யாவில் தங்கி பயிற்சி செய்தபோது, அதன் தலைவர் ரம்ஸான் கட்ரோவ் அவர்களை கெளரவித்து விருந்தளித்தார்.  அப்போது எகிப்து நட்சத்திர வீரர் சலாவுக்கு கெளரவ குடிமகன் அந்தஸ்து அளிக்கப்பட்டது. 

கட்ரோவ் மீது ஏராளமான மனித உரிமை மீறல் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது பெயரை அரசியல் ரீதியில் பயன்படுத்தியதால் சலா ஆவேசம் அடைந்துள்ளார். இதனால் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு பின் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என்று அணி நிர்வாகத்திடம் அவர் தெரிவித்துள்ளாராம்.

இதுகுறித்த அதிகார தகவல்கள் விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

லிவர்பூல் அணியில் விளையாடி வரும் சலா, ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஈடாக பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.