தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தடகள வீராங்கனை டூட்டி சந்த் தெரிவித்த கருத்துக்கு அவரது தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒடிசாவை சேர்ந்தவர் 23 வயதானவர் டுட்டீ சந்த். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று 2 வெள்ளிப்பதக்கங்களை இந்தியாவிற்கு வென்று தந்தார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலின விவகாரத்தில் சிக்கினார். அவரிடம் ஆண்தன்மைக்குரிய ஹார்மோன் அதிகமாக இருப்பதாக கூறி தடகள போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு அவர் மீதான தடை விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகாவும், தனக்கான துணையை தேடி கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தனது சொந்தக்கார பெண் தான், அவர் மீது அதிகம் ஈர்ப்பு உள்ளதால் எதிர்காலத்தில் அவருடன் இணைந்து வாழ விரும்புகிறேன்’ என்றும் அதிர்ச்சி அளித்திருந்தார்.

இந்நிலையில் டுட்டீ சந்தின்  தாயார் அக்கோஜி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “எனது மகள் திருமணம் செய்து கொள்ள நினைப்பது யாரை தெரியுமா? அந்த பெண் எனது மருமகளின் பெண், என்னுடைய பேத்தி. எனக்கு பேத்தி என்றால் டுட்டீக்கு மகள் போன்றவள். ஒரு மகளை தாய் திருமணம் செய்து கொள்வதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா?

நான் எனது மகளிடம் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னதற்கு நீதிமன்றம் உத்தரவு என்னிடம் இருக்கிறது என்கிறார். அவர்கள் இப்போது எங்கு இருக்கீறார்கள் என்று தெரியாது. ஆனால் டுட்டீ இதை எல்லாம் மறந்துவிட்டு விளையாட்டில் முழு கவனம் செலுத்த வேண்டும்.ஒரு பெண் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது இந்த சமூகத்திற்கும்,சட்டத்தின் முன் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ப்படும். ஆனால் நாங்கள் கிராமத்துவாசிகள் எங்களால் இதுப்போன்ற செயல்களை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.