இந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், மற்றும் சமீர் வர்மா அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் மற்றும் உலகின் 8-ஆம் நிலை வீரர் சீனாவின் லின் டேன் மோதினர்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 21-15, 9-21, 21-14 என்ற செட் கணக்கில் லின் டேன்னை வீழ்த்தினார் பிரணாய்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா மற்றும் டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவ் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 21-9, 12-21, 22-20 என்ற செட் கணக்கில் ராஸ்மஸ் ஜெம்கேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் சமீர் வர்மா.