இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து இந்தியாவின் சிந்து, பிரணாய் வெளியேறினர்.

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்தப் போட்டியில் 14-21, 15-21 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவிடம் தோல்வி கண்டு சிந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

அதேபோன்று, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் மற்றும் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சீன வீரர் ஷி யுகியுடன் மோதினர்.

இதில், 17-21, 18-21 என்ற நேர்செட்டில் சீன வீரர் ஷி யுகியிடம் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார் பிரணாய். 

இவர்கள்  இருவரும் இந்த போட்டியில் இருந்து வெளியேறியதால் இந்திய அணி இந்தப் போட்டியில் இருந்து மொத்தமாக வெளியேறியது.