இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 டெஸ்ட் போட்டிகளில் முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய வீரர்கள் பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இதில் காயம் காரணமாக  வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறவில்லை. மேலும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளனர். அணியின் விவரம்; 

விராத் கோஹ்லி(கேப்டன்), தவான், முரளி விஜய், கே.எல்.ராகுல்,  புஜாரா, ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டியா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, சர்துல் தாகூர் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.முன்னதாக 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா கைப்பற்றியது. ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.