Asianet News TamilAsianet News Tamil

#TokyoOlympics மகளிர் பாக்ஸிங்கில் காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் லவ்லினா..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பாக்ஸிங் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
 

indian woman boxer lovlina borgohain beats nadine apetz to enter welterweight quarterfinals in tokyo olympics
Author
Tokyo, First Published Jul 27, 2021, 12:08 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பாக்ஸிங் 69 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லவ்லினா, ஜெர்மனியின் நடைன் அபெட்ஸை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய இந்தியாவின் லவ்லினா, 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில் வெற்றி பெற்றால் பதக்க வாய்ப்பை உறுதி செய்வார் லவ்லினா.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு இதுவரை ஒரு பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் வெள்ளி வென்றார். அதன்பின்னர் இதுவரை வேறு எந்த பதக்கமும் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், காலிறுதிக்கு முன்னேறியுள்ள லவ்லினா இந்தியாவிற்கு நம்பிக்கையளிக்கிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios