இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. 

அதன்பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி, 2011 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடர் ஆடியது. அந்த இரண்டு தொடர்களிலுமே இந்திய அணி தோல்வியை தழுவியது. 2011ம் ஆண்டு 0-4 எனவும் 2014ம் ஆண்டு 1-3 எனவும் டெஸ்ட் தொடரை இழந்தது. தோனி தலைமையிலான இந்திய அணி 2011 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறையும் டெஸ்ட் தொடரை இழந்தது. 

அதன்பிறகு 4 ஆண்டுகள் கழித்து இந்திய அணி, தற்போது இங்கிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக ஆடிவருகிறது. 2011 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதே நேரத்தில், 2007ம் ஆண்டுக்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்து இந்திய அணி மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.