Asianet News TamilAsianet News Tamil

ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் இந்தியாவிற்கு முதல் தங்கம்..! ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்த தங்கம் தான் இந்தியாவிற்கு ஒரே தங்கம்.
 

indian javelin thrower neeraj chopra is the first athlete wins gold for india in olympics
Author
Tokyo, First Published Aug 7, 2021, 5:42 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்களை வென்ற நிலையில், ஈட்டி எறிதலில் 7வது பதக்கத்தை தங்க பதக்கமாக வென்று கொடுத்துள்ளார் நீரஜ் சோப்ரா.

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா, இறுதி போட்டியின் முதல் சுற்றில் 87.03 மீட்டர் தூரம் வீசினார். 2வது சுற்றில் 87.58 மீட்டர் தொலைவிற்கு வீசினார். 3வது சுற்றில் 76.79 மீட்டர் தூரத்திற்கும் வீசினார். 6 சுற்றுகளிலும் நன்றாக வீசினார் நீரஜ் சோப்ரா.

indian javelin thrower neeraj chopra is the first athlete wins gold for india in olympics

6 சுற்றுகளிலும் எந்த நாட்டு வீரரும், 2வது சுற்றில் நீரஜ் சோப்ரா வீசிய 87.58 மீட்டர் தூரத்திற்கு வீசவில்லை. எனவே அதிக தொலைவிற்கு வீசிய நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். 

ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை வென்று கொடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. 

Follow Us:
Download App:
  • android
  • ios