காஞ்சி வீரன்  கிரிக்கெட் அணியின் உரிமையாளரும் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை.கடன் தொல்லை காரனமாக தொற்கைலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை விஸ்வேஸ்வர புரம் பகுதியை சேர்ந்தவர் வி.பி.சந்திரசேகர். இவர் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஆவார்.வி பி சந்திரசேகர் தனது மனைவி சவுமியா மற்றும் அவரது மகள்கள் சுவேத்தா , ரம்யா ஆகியோருடன் வசித்து வந்தார்.இந்திய கிரிக்கெட் அணிக்காக 1988 முதல் 1990 வரை விளையாடினார். பின்னர் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்று தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் வி பி சந்திரசேகர் தனது வீட்டில் முதல் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது அறைக்கு வெகுநேரமாக திறக்காமல் இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தனது வேட்டியால் மின்விசிறியில் தூக்கிட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் போலீசார் வி பி சந்திரசேகரின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து  மேற்கொண்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.