ரஜினிகாந்த் அறிவுரையால் இந்திய ஏ அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது .அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த  ஆல்ரவுண்டு வீரர் ஹர்திக் பாண்டியா தற்போது பூரண குணம் அடைந்துள்ளார் .  இதனால் இங்கிலாந்து செல்லும் இந்திய ஏ அணியில் அவர் இடம் பிடித்தார் .  இந்நிலையில்  அவரது பயிற்சியாளர்  எஸ் . ரஜினிகாந்த் போட்டிகளில் விளையாடுவதை தள்ளுப்போடும்படி பாண்டியாவுக்கு  அறிவுரை வாழங்கியுள்ளார்.

  

அதில் தற்போது அறுவை சிகிச்சையிலிருந்து   குணமாகி  உள்ள  நிலையில் உடனே போட்டிகளில்  விளையாடும்போது அது உடல் ரீதியாக  பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் போட்டிகளில் பங்கேற்பனை தற்போதைக்கு தவிர்க்கும்மாறும்  கேட்டுக்கொண்டுள்ளார்.  இதனால்   இந்திய ஏ அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஹர்திக் பாண்டியா,   இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டு வீரர்  விஜய் சங்கர் இந்திய ஏ அணியில் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது .  இது குறித்து தெரிவித்துள்ள அவரின் பயிற்சியாளர் எஸ். ரஜினிகாந்த் பாண்டியா 100 சதவீத உடல் தகுதி பெற்றிருந்தாலும் இதுவரையில் அவருக்கு உடல் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை , 

Also Read - இடத்தையும் தேதியையும் மட்டும் சொல்லுங்கடா.. நாங்க ரெடி.. ஆஸ்திரேலிய கேப்டனின் சவாலை கெத்தா ஏற்ற கேப்டன் கோலி

அவர் அதிலும் தேர்ச்சி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது , தற்போததைக்கு ஓரளவுக்கே   உடல் தேறியுள்ள  நிலையில் உடனே அவர்  போட்டிகளில் அடுத்தடுத்து விளையாடுவதன் மூலம் அவருக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது .  எனவே உடல்திறன் இன்னும்  முழுமை பெறாத நிலையில் ,  படிப்படியாக போட்டிகளில்  பங்கேற்குமாறு நான் அவருக்கு அறிவுரை வழங்கினேன் அதனால் அவர் இந்த முடிவு எடுத்திருக்கிறார் என ஒரு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.