இந்தியன் வங்கி கோப்பைக்கான மகளிர் பகலிரவு ஒரு நாள் போட்டியில் எல்லோ சேலஞ்சர்ஸ் அணி வெற்றி வாகை சூடியதுபெற்றது.

இந்தியன் வங்கி கோப்பைக்கான மகளிர் பகலிரவு ஒரு நாள் போட்டி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்றது.

இதில் வொயிட் வாரியர்ஸ் மற்றும் எல்லோ சேலஞ்சர்ஸ் என இரு அணிகள் உருவாக்கப்பட்டது, இவ்விரு அண்கள் இடையேயான ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்டது.

இதில் எல்லோ சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றது. வொயிட் வாரியர்ஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. 

இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் கிஷோர் காரத், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், முன்னாள் வீரர் எஸ்.பத்ரிநாத் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தனர். இந்தியன் வங்கி அதிகாரிகள் மணிமாறன், நாகராஜனும் கலந்து கொண்டனர்.