முதன் முதலாக 1984ம் ஆண்டு ஆசிய கிரிக்கெட்  போட்டிகளில் தொடங்கின.1984 - ஷார்ஜாவில் நடந்த போட்டிகளில் இந்தியா,பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் பங்குபெற்றன. இந்திய அணி கோப்பையை வென்றது

1986  ஆம் ஆண்டு   தமிழ் ஈழ பிரச்னையை தொடர்ந்து இலங்கையில் நடந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்கவில்லை. 1986 - இலங்கையில் நடந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
 

1988 - பங்களாதேஷில் நடந்த போட்டிகளில் இந்திய  அணி கோப்பையை வென்றது. இதைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டில்  இந்தியாவுடன் நல்லுறவு இல்லாத நிலையில் போட்டிகளில் பங்கேற்பதை பாகிஸ்தான் அணி தவிர்த்தது. அப்போது கோப்பையை இந்திய அணி வென்றது

1993 - இந்தியா பாகிஸ்தான் இடையே தொடந்து பிரச்னை நிலவி வந்ததால் ஆசிய கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

பின்னர்  1995 ஆண்டு  ஐக்கிய அரபு எமிரேட்சில்  நடந்த  போட்டிகளில் இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதே போன்று 1997 - இறுதிப்போட்டியில் இந்தியா அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.

பின்னர்  2000 ஆவது ஆணடில்  பங்களாதேஷில் நடந்த போட்டிகளில் முதன் முறையாக பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது. 2004 - இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை தட்டிச் சென்றது.

2008 - முதன்முறையாக பாகிஸ்தானில் நடந்த போட்டிகளில் இலங்கை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றது. 2010 - இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணி கோப்பையை வென்றது.  2012- முதன் முறையாக  இறுதிப்போட்டிக்கு  தகுதிப்பெற்ற  பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது

2014 - இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஐந்தாவது முறையாக இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2016 - முதன் முறையாக ஆசிய கோப்பையில்  டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது  இந்திய அணி கோப்பையை வென்றது. அதிகபட்சமாக இந்திய அணி ஆறு முறை ஆசிய கோப்பை வென்றுள்ளது.

இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. ‘சூப்பர் 4’ சுற்று போடடிகளில்  இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.

நேற்று நடைபெற்ற  இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதே போன்று நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில்  ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தி  வங்க தேச அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து நாளை மறுநாள் நடைபெறவுள்ள போட்டிகளில் வங்கதேசமும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் வரும் 28 ஆம் தேதி நடக்கவுள்ள இறுதிப் போட்டிகளில் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி நல்ல ஃபார்மில் உள்ளதால் நிச்சயமாக ஆசிய கோப்பையை தட்டிச் செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.