இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்தியாவில் ஒருசில மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தேசமும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. 

2 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக தடுப்பூசி வேகமாக போடப்பட்டுவருவதால், மக்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

வெகு குறைவான பேருக்கே கொரோனா தொற்று உறுதியாகிவரும் நிலையில், அந்த குறைந்த பேரில், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியும் ஒருவர். 

தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற தகவலை டுவிட்டரில் பகிர்ந்துள்ள சுனில் சேத்ரி, எனக்கு கொரோனா பாசிட்டிவ். வைரஸ் பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டுவருகிறேன். விரைவில் கால்பந்து களத்திற்கு திரும்புவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…