சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டீனாவை 2-1 என வீழ்த்தி அசத்தல் வெற்றி கண்டது இந்தியா.
 
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி கடைசிப் போட்டிகள் நெதர்லாந்தின் பிரெடா நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் உலகின் தலைசிறந்த ஆறு அணிகள் கலந்து கொண்டுள்ளன. 

அதன்படி, சனிக்கிழமை நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை சாய்த்தது இந்தியா. அதன் தொடர்ச்சியாக ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டீனாவை அடுத்த ஆட்டத்தில் எதிர்கொள்ள இருந்தது இந்தியா.

அதன்படி, நேற்று இந்தப் போட்டியின் இரண்டாவது ஆட்டம் நேற்று நடந்தது. அதில், இந்தியாவும், ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜெண்டீனாவும் மோதின.

இந்த ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் மூலம் கோலடித்தார். 28-வது நிமிடத்தில் மந்தீப் சிங் பீல்ட் கோலடித்தார். அர்ஜென்டீனா வீரர் கோன்ஸாலோ பெய்லட் ஒரு கோலை அடித்தார். ஆட்டத்தின் இறுதியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. 

வரும் 27-ஆம் தேதி உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.