சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இறுதி ஆட்டத்தில் ஆஸி. அணியிடம் தோல்வியடைந்து இந்திய அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது.
 
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்தின் பிரெடா நகரில் நேற்று இரவு நடைப்பெற்றது. 

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மோதின. 

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரண்டு அணிகளும் கடுமையாக போராடின. ஆனால், இந்த ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. 

இதனையடுத்து பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தங்கம் வென்றது. 

சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா கடந்த 2016-ஆம் நடந்த போட்டியிலும் இறுதியில் இந்தியாவை பெனால்டி ஷூட் முறையில் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. நெதர்லாந்து அணி வெண்கலம் வென்றது.