Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்..! உலகக்கோப்பை போட்டியில் தொடரும் சாதனை..!

சீனாவில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ilavenil valarivan won gold medal
Author
China, First Published Nov 21, 2019, 12:17 PM IST

சீனாவில் தற்போது உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக பலர் தேர்வாகி பங்கு பெற்று வருகின்றனர். அவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவனும் கலந்து கொண்டுள்ளார். இன்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இளவேனில் 250.8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

ilavenil valarivan won gold medal

இதற்கு முன்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடைபெற்ற சீனியர் உலகக்கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியில் பங்கேற்ற முதல் ஆண்டிலேயே இளவேனில் தங்கம் வென்றிருந்தார். தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை போட்டியிலும் இளவேனில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios