சில இரக்கமற்ற நபர்களின் செயல்களால் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார் சர்தான் அஸ்மோன்.

உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் 11 கோல்கள் அடித்து அசத்திய ஈரான் அணியின் முன்கள வீரரான சர்தார் அஸ்மோன் (23).

இந்த உலக கோப்பையில் எந்த கோலும் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சர்தார் அஸ்மோன் தனது டிவிட்டர் பக்கத்தீல் பின்வருமாறு பதிவிட்டு இருந்தார்.

"தேசிய அணிக்காக விளையாடியது மிகப்பெரிய கௌரவமாகும். இது எனது வாழ்நாள் முழுவதும் பெருமை அளிக்கக் கூடியதாகும். துரதிர்ஷ்டவசமாக எனது தேசிய அணியில் இருந்து விடைபெறும் முடிவை எடுக்க வேண்டியதாகிவிட்டது.

எனது வாழ்க்கையில் முக்கியமான, மிகவும் வேதனைக்குரிய முடிவை எடுத்து இருக்கிறேன். எனது தாயார் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எனினும் சில இரக்கமற்ற நபர்களின் செயல்களாலும், அவமரியாதையினாலும் வேறுவழியின்றி இந்த ஓய்வு முடிவை எடுக்க வேண்டியதானது" என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.