Asianet News TamilAsianet News Tamil

பீர் கம்பெனி கொடுக்கும் விருது எனக்கு வேண்டாம்; எகிப்து வீரரின் தைரியத்துக்கு குவியும் பாராட்டுகள்...

I do not want award of beer company courage Egyptian football player ...
I do not want award of beer company courage Egyptian football player ...
Author
First Published Jun 19, 2018, 1:00 PM IST


பீர் உற்பத்தி நிறுவனம் வழங்கிய சிறந்த வீரருக்கான விருதை வேண்டாம் என்று மறுத்துள்ளார் எகிப்து அணியின் கோல்கீப்பர்.

பீர் உற்பத்தி செய்யும் நிறுவனமான பட்வெய்ஸர் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பான்சர் செய்துள்ளது. 

அதன்படி, நடந்து வரும் உலகக் கோப்பை போட்டிய்ல் உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் எகிப்து அணி கலந்து கொண்டது. அதில், 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை எகிப்து அணி வென்றது. 

அந்த ஆட்டத்தில் எதிரணிக்கு கோலடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தராமல் சிறப்பாக செயல்படுத்தவருக்கு சிறந்த வீரர் விருது வழங்க பீர் உற்பத்தி செய்யும் நிறுவனமான பட்வெய்ஸர் முடிவெடுத்தது.

அதன்படி, எகிப்து அணியின் கோல்கீப்பரான முகமது எல்-ஷனாவிவிற்கு சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. ஆனால், அந்த விருதை முகமது எல்-ஷனாவி வேண்டாம் என்று மறுத்துள்ளார்.

அதற்கு கூறிய காரணம். அவரது மதம். ஆம். இஸ்லாமிய கோட்பாடுகளின்படி மது அருந்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதால், பட்வெய்ஸர் நிறுவனம் வழங்கிய விருதை தான் ஏற்க விரும்பவில்லை என்று எல்-ஷனாவி மறுத்துவிட்டார். 

விருதை பெற அவர் மறுத்ததற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து பாராட்டி வருகின்றனர். மேலும், விருதை மறுக்கும் அவரது படத்தை சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்தும் வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios