Asianet News TamilAsianet News Tamil

ஷாருக் கான், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நம்ம நயன்தாரா...! வீடியோ

இந்திய ஹாக்கி அணியை உற்சாகப்படுத்தும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும், இந்தி மெகா ஸ்டார் ஷாருக் கானும் இணைந்து உருவாக்கிய  விளம்பரப்பட  வீடியோவில் நடிகை நயன்தாராவும் காட்சி தந்து இந்திய ஹாக்கி ரசிகர்களின் நெஞ்சில் பால்வார்வார்த்தார்.

உலகில், ஹாக்கியில் பலம் வாய்ந்த அணிகளுள் ஒன்றான இந்திய ஹாக்கி அணியைப் பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு உத்வேகம் மற்றும் ஊக்கமும் அளிக்கிற விதமாகவும் 'ஜெய் ஹிந்த் இந்தியா...' எனும் புதிய வீடியோ ஒன்று தற்போது உருவாகியுள்ளது. ப்டாஸ் (BToS) புரொடக்‌ஷன்ஸ் எனும் நிறுவனம் எடிட்டிங் செய்ததுடன் இதை இயக்கியும் உள்ளது. 

ஷா ருக் கான், நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இணைந்து தோன்றி நடித்துள்ள இந்தப் பாடலில் ரஹ்மானுடன் இணைந்து ஸ்வேதா மோகன், சிவமணி, நீதி மோகன், சாஷா திருப்பதி உள்ளிட்டோரும் பணியாற்றியுள்ளனர். குல்ஸார் பாடலின் வரிகளை எழுத ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 47 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை நேற்று ஞாயிறன்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது யூடுப் பக்கத்தில் வெளியிட்டார். ஒரே நாளில் மூன்று லட்சம் பார்வையாளர்களைத் தாண்டிய அப்பாடலின் வீடியோ லிங்க் இதோ...

Video Top Stories