20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) சார்பில், 20-வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் 2002-ல் சீமா புனியாவும், 2014-ல் நவஜீத் கவுர் தில்லானும் மட்டுமே இந்தியா சார்பில் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.

ஹிமா தாஸ் இந்த சாதனையை 51.46 விநாடிகளில் அடைந்துள்ளார். இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஹிமா புதிய வரலாறு படைத்துள்ளார். இவருக்கு பிரதமர் மோடி,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.