தடகள வீராங்கனை ஹிமா தாஸின் பயிற்சியாளர் மீது மற்றொரு வீராங்கனை பாலியல் புகார் கூறியுள்ளது சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹிமா தாஸ். சமீபத்தில் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில்,மின்னல் வேகத்தில் ஓடி, 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும்பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், ஹிமா தாஸின் பயிற்சியாளராக உள்ள நிப்பான் தாஸ்க்கும் பலர் பாராட்டுதெரிவித்தனர். 
 
திடீரென தற்போது நிப்பான் தாஸ் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை கூறியவரும் ஒரு தடகள வீராங்கனைதான்.இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத அந்த வீராங்கனை கடந்த ஜூன் மாதம் 22ம் தேதியன்று அசாம் மாநில போலீசில் புகார்செய்துள்ளார். அதன்பேரில், நிப்பான் தாஸ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த செய்தி தற்போதுதான் ஊடகத்தில் வெளியாக தொடங்கியுள்ளது. ஆனால், நிப்பான் தாஸ் இந்த குற்றச்சாட்டைமறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘’என் மேல் எந்த தப்பும் இல்லை. நான் ஒரு அப்பாவி. என்னிடம் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர்பிரிவில் குறிப்பிட்ட பெண் பயிற்சி பெற்றார். ஆனால், அவருக்கு மாநில அளவிலான தடகள போட்டிகளிலும், தேசிய அளவிலானபோட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு அவர் திறமையில்லாமல் இருந்ததே காரணமாகும்.
 
ஆனால், இதனை புரிந்துகொள்ளாமல் அவர் என் மீது பொய்யான புகாரை சுமத்தியுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில்போலீசார் வேண்டுமென்றே செயல்படுகின்றனர். என் மீது எப்ஐஆர் பதிவு செய்தவர்கள், ஏன் இன்னும் என்னை கைதுசெய்யவில்லை ,’’ என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த விவகாரம் இந்திய விளையாட்டுத் துறையில் திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிமா தாஸின்சாதனையால் தடகள போட்டிக்கு தனி முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இந்த சூழலில், நிப்பான் தாஸ் மீதான பாலியல் புகார்வேண்டுமென்றே அதனை பாதிக்கச் செய்வதாக உள்ளதென்று, விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.