முத்தரப்பு டி-20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி  பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற  ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக சாலமன் மயர் 63 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆண்ட்ரூ டை 3,  ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பின்ஸ் மற்றும் கேரி அடுத்தடுத்து வெளியேறினர்.மேக்ஸ்வேல்-ஹெட் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.  இறுதியில் ஆஸ்திரேலியா அணி 19.5 பந்துகளில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வேல் 56, ஹெட் 48 ரன்கள் எடுத்தனர்.  பாகிஸ்தான்-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டி வரும் ஞாயிற்று கிழமை நடைபெறகிறது.