Asianet News TamilAsianet News Tamil

2 வாட்ச் 10 கோடி ரூபாய்… ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து அலேக்கா தூக்கிய சுங்கவரி துறை!! | Hardik Pandya

#Hardik Pandya | மும்பை விமான நிலையத்தில் ஹார்திக் பாண்டியாவின் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

hardik pandyas 5 crore worth watches seized by customs
Author
Mumbai, First Published Nov 16, 2021, 12:53 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, மிகக் குறுகிய காலத்தில் தனது கேரியரில் சாதனை படைத்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்ற ஹார்திக் பாண்டியா, மிகக் குறுகிய காலத்தில் உலக கிரிக்கெட்டில் ஏராளமான செல்வத்தையும் புகழையும் அடைந்துள்ளார். விலை உயர்ந்த கடிகாரங்களை விரும்பும் இவர் சில மாதங்களுக்கு முன், 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள Patek Philippe Nautilus Platinum 5711 கடிகாரத்தை அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹார்திக் பாண்டியாவின் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை சுங்கத்துறை பறிமுதல் செய்தனர். 7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது.  இதில் இந்திய அணியும் பங்கேற்றது. இந்திய அணி சார்பில் விளையாடிய நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யாவுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஷாட் பிட்ச் பந்து ஒன்று தோள்பட்டையில் தாக்கியது.  இதைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்பதில் தடை ஏற்பட்டது. உலக கோப்பை போட்டிகள் நிறைவடைந்தன.  இதனால், துபாயில் இருந்து பாண்ட்யா நாடு திரும்பினார்.  

hardik pandyas 5 crore worth watches seized by customshardik pandyas 5 crore worth watches seized by customs

அப்போது, மும்பை விமான நிலையத்தில் அவரிடம் மும்பை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டதில், பணம் செலுத்தியதற்கான உரிய ரசீதுகள் எதுவுமில்லாத 2 வாட்சுகள் இருந்தது தெரிய வந்தது.  இதை அடுத்து ஹார்திக் பாண்டியாவின் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடிகாரங்களுக்கான பில் ஹார்திக்கிடம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் அவர் தன்னிடம் கடிகாரங்கள் இருப்பதாக அவர் அறிவிக்கவும் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ஹார்திக் பாண்டியாவின் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

hardik pandyas 5 crore worth watches seized by customshardik pandyas 5 crore worth watches seized by customs

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இதற்கு தனது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நான் துபாயில் இருந்து மும்பைக்கு வந்ததாகவும் அதிகாலையில் ஏர்போர்ட்டில் என்னுடைய லக்கேஜை எடுத்த பின் தானே நேரடியாக மும்பை ஏர்போர்ட்டில் இருக்கும் சுங்கத்துறை கவுண்டருக்கு சுயமாக சென்றதாகவும் கூறிய அவர், தான் துபாயில் இருந்து வாங்கி வந்த பொருட்களை அவர்களிடம் கொடுத்ததாகவும் இதற்கு இறக்குமதி வரி செலுத்த வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக தவறான தகவல்கள் பரவுவதாக கூரிய ஹர்திக், தானாகவே சென்றுதான் துபாயில் இருந்து வாங்கி வந்த பொருட்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் இதற்கான எந்த விதமான இறக்குமதி வரியை கொடுக்கவும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் வாங்கிய வாட்ச்களின் மதிப்பு 1.5 கோடி ரூபாய்தான் என்று கூறிய அவர், இணையத்தில் வரும் செய்திகள் போல 5 கோடி ரூபாய் கிடையாது என்றும் தான் சட்டத்தை மதிக்க கூடிய குடிமகன் என்றும் அனைத்து அரசு அலுவலர்களையும் தான் மதிப்பதாக விளக்கம் அளித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios