ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே தோனி தான் நினைவுக்கு வருவார். யார்க்கர் மற்றும் ஃபுல் லெந்த் பந்துகளை ஹெலிகாப்டர் ஷாட் மூலம் தோனி சிக்ஸருக்கு அனுப்புவதை ரசிக்காத கிரிக்கெட் ரசிகரே இருக்க முடியாது.

பொதுவாக போட்டியின் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேனை கட்டுப்படுத்த யார்க்கர் பந்துகளை பவுலர்கள் வீசுவது வழக்கம். யார்க்கர் மூலம் பேட்ஸ்மேனை கட்டுப்படுத்த முடியும் என்ற இலக்கணத்தை, ஹெலிகாப்டர் ஷாட் மூலம் உடைத்தவர் தோனி. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை தற்போது மற்ற இந்திய வீரர்களும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். 

அயர்லாந்துக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்களான ரோஹித்தும் தவானும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். ஆனால் இறுதியில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 

கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகள் விழுந்தன. கடைசி ஓவரின் 5வது பந்தில் கோலி அவுட்டானார். இதையடுத்து கடைசி பந்தை ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டார். அந்த பந்தை யார்க்கராக வீசினார் சேஸ். ஆனாலும் அதை தோனியின் பாணியில் ஹெலிகாப்டர் ஷாட்டின் மூலம் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஹர்திக் பாண்டியா. 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="da" dir="ltr">Hardik&#39;s helicopter <a href="https://t.co/gXaEYeTofH">pic.twitter.com/gXaEYeTofH</a></p>&mdash; Videos Shots (@videos_shots) <a href="https://twitter.com/videos_shots/status/1012017365574303745?ref_src=twsrc%5Etfw">June 27, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

பாண்டியாவிற்கு முன்னதாக இளம் வீரர் இஷான் கிஷானும் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்திருந்தார்.

நடந்து முடிந்த ஐபிஎல்லில் கொல்கத்தாவுக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இஷான் கிஷான் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹர்திக் பாண்டியா அடித்துள்ளார்.