அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி அயர்லாந்தை மிரட்டிய ஹர்திக் பாண்டியா, ஒற்றை கையில் அடித்த சிக்ஸர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ராகுல் மற்றும் ரெய்னா ஆகியோர் அபாரமாக ஆடினர். அரைசதம் கடந்த ராகுல் 70 ரன்களிலும் ரெய்னா 69 ரன்களிலும் அவுட்டாகினர். 

மனீஷ் பாண்டே மந்தமாக ஆட, கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, அயர்லாந்தை அலறவிட்டார். கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். இந்த போட்டியில் அதுவரை சிறப்பாக பந்துவீசி வந்த கெவின் ஓ பிரைனின் பந்துவீச்சை சிதறடித்தார். 

9 பந்துகள் மட்டுமே பிடித்து 32 ரன்களை குவித்தார் ஹர்திக் பாண்டியா. பாண்டியாவிற்கு கடைசி ஓவரை வீசுவதற்கு முன்பாக 3 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து, ராகுல், ரோஹித், ரெய்னா ஆகிய மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் கெவின். 

பாண்டியாவிற்கு கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸர், நான்காவது பந்தில் ஒரு சிக்ஸர், ஐந்தாவது பந்தில் பவுண்டரி என கெவினின் பவுலிங்கை சிதைத்துவிட்டார் ஹர்திக். 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட பாண்டியா, 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 32 ரன்களை குவித்தார்.

அவற்றில் ஒரு சிக்ஸரை ஒற்றை கையில் அடித்தார் ஹர்திக் பாண்டியா. ஆஃப் ஸ்டம்புக்கு அப்பால் வீசப்பட்ட பந்தை அசாத்தியமாக எட்டி ஒற்றை கையில் பேலன்ஸ் செய்து அடித்து சிக்ஸருக்கு விரட்டினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

<blockquote class="twitter-tweet" data-lang="en-gb"><p lang="und" dir="ltr">Wow <a href="https://t.co/TuL5OcyZ1B">pic.twitter.com/TuL5OcyZ1B</a></p>&mdash; Utkarsh Bhatla (@UtkarshBhatla) <a href="https://twitter.com/UtkarshBhatla/status/1012747129826299904?ref_src=twsrc%5Etfw">29 June 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் கூட  கடைசி பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் பந்தை பாண்டியா சிக்ஸருக்கு விரட்டியது குறிப்பிடத்தக்கது.