gt vs lsg 2022: மும்பை வான்ஹடே மைதானத்தில் இன்று இரவு நடக்கும் 15-வது சீசன் ஐபிஎல்டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ்.
மும்பை வான்ஹடே மைதானத்தில் இன்று இரவு நடக்கும் 15-வது சீசன் ஐபிஎல்டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ்.
ஐபிஎல் தொடருக்கு இரு அணிகளுமே அறிமுகம், வீரர்களும் கலந்திருப்பதால், இன்றைய ஆட்டம் சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும். அதிலும் ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணியும், கேஎல் ராகுல் தலைமையில் லக்னோஅணியும் மோதுவது கூடுதல் ஸ்வாரஸ்யம்

தேறுவாரா ஹர்திக்
ஹர்திக் பாண்டியா போனசீசனில் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை. டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு வழங்கியும் பெரிதாக சோபிக்கவி்ல்லை. காயம்முழுமையாக குணமடைந்துவிட்டதா, பேட்டிங்கில் பாண்டியா ஃபார்மில் இருக்கிறார என்ற கேள்விகள் எழுகின்றன. அதுமட்டுமல்லாமல் கேப்டன்ஷிப்பை பாண்டியா முதன்முதலில் தாங்கி களம்காண்பதையும் ர சிகர்கள் ஆர்வத்துடன் காண காத்திருக்கிறார்கள்.
3 முக்கிய வீரர்கள்
லக்னோ, குஜராத் அணிகள் ஏலத்தில் வருவதற்கு முன்பே தலா 3 வீரர்களை தேர்வு செய்துவிட்டன. குஜராத் அணி ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மான் கில் ஆகியோரை விலைக்குவாங்கியது. லக்னோ அணி கேஎல் ராகுல், ஸ்டாய்னிஸ், ரவி பிஸ்னோய் ஆகியோரை வாங்கியது.
இரு அணிகளிலும் பந்துவீச்சு, பேட்டிங்கிலும் சமபலம் கொண்ட வீரர்கள் இருப்பதால், போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

டாஸ் முக்கியப்பங்கு
வான்ஹடே மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே, கேகேஆர் அணியின் ஆட்டம் எதிர்பார்க்கப்பட்டநிலையி்ல் குறைவான ஸ்கோர்தான் எடுக்க முடிந்தது. ஆதலால், இன்றைய ஆட்டத்தில் டாஸ்வெல்லும் அணி பீல்டிங்கைத் தேர்வுசெய்யும். வான்ஹடே ஆடுகளம் மெதுவாகவும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கிறது. ஆதலால், லக்னோ, குஜராத் அணியில் சுழற்பந்துவீச்சுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.
(உத்தேச அணி) குஜராத் டைட்டன்ஸ்
ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ஷுப்மான் கில், விருதிமான் சஹா, மேத்யூ வேட், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேட்டியா, ரஷித் காண், முகமது ஷமி, லாக்கி பெர்குஷன், சாய் கிஷோர்

இதில் குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக கில்லுடன் மேத்யூ வேட் களமிறங்க வாய்ப்புள்ளது. சுழற்பந்துவீச்சுக்கு சாய் கிஷோர், ரஷித் கான், திவேட்டியா, மில்லர் ஆகியோர் உள்ளனர்.ஆல்ரவுண்டர்களில் விஜய் சங்கர் , ஹர்திக் பாண்டியா உள்ளனர். நடுவரிசை பேட்டிங்கிற்கு ஹர்திக்பாண்டியா, விஜய் சங்கர், மில்லர், திவேட்டியா என வலுவாக இருக்கிறது. ஷமி, பெர்குஷன் என இரு அனுபவமான வேகப்பந்துவீச்சாளர்களும், நடுப்பகுதி ஓவர்களை வீச பாண்டியா, விஜய் சங்கரும் உள்ளனர்.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்(உத்தேசஅணி)
கே.எல்.ராகுல்(கேப்டன்), குயின்டன் டீ காக், இவான் லூயிஸ், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, குர்னல் பாண்டியா, கிருஷ்ணப்பா கவுதம், ரவி பிஸ்னோய், ஆன்ட்ரூ டை, அங்கித் ராஜ்பூத், ஆவேஷ் கான்

இதில் தொடக்கவரிசையில் ராகுல், டீகாக் களமிறங்கஅதிக வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால், லீவிஸ் களமிறங்குவார் அல்லது ஒன்டவுன் களமிறங்கலாம். நடுவரிசையில் மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, குர்னல் பாண்டியா, கவுதம் உள்ளனர். வேகப்பந்துவீச்சில் ஆவேஷ்கான், ஆன்ட்ரூ டை மட்டும் நம்பிக்கையளிக்கிறார்கள். ராஜ்புத் பெரிதாக கடந்த போட்டிகளில் பந்துவீசவில்லை. சுழற்பந்துவீச்சில் கவுதம், பிஸ்னோய்,குர்னல் பாண்டியா உள்ளனர்.
இரு அணிகளும் சமபலத்துடன் இருந்தாலும், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸிடம் பேட்டிங் வலுவாக இருப்பதால், அவர்கள் வெல்லவே அதிகமான வாய்ப்புள்ளது
